மீண்டும் திரைமறைவில் களமிறங்கும் மகிந்த! தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள புதிய திருப்பம்
அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ள பொதுஜன பெரமுனவின் பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்துகொள்ள உள்ளார் என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் நாமல் ராஜபக்ச (04) திகதி கைது செய்யப்பட்டார்.
12 ஆம் திகதி பேரணி நிச்சயமாக நடைபெறும்
இதனையடுத்து எதிர்வரும் செப்டம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த பின்னணியில் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்ட அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ள பொதுஜன பெரமுனவின் மாபெரும் பேரணியில் நாமல் ராஜபக்சவின் வெற்றிடத்தை ஈடுசெய்ய மகிந்த ராஜபக்ச அநுராதபுரத்திற்கு வருகை தருவார் என்று ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூறியுள்ளார்.
இந்நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி 12 ஆம் திகதி நிச்சயமாக நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
பிரதான மேடைக்கு சென்று மக்களிடையே உரையாற்றுவதற்கு பதிலாக, மேடைக்கு முன்பாகவோ அல்லது மற்றொரு தளத்திலோ இருந்து பேரணியில் கலந்துகொள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முடிவு செய்துள்ளதாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூறியுள்ளார்.
பத்து கைதிகளுடன் காவலில் மகிழ்ச்சியாக நாமல்..! உடல்நிலை தொடர்பில் வெளியான அறிக்கையினால் மீண்டும் சிக்கல்
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri