கோட்டாபயவை கைவிட்டுவிட்டு மகிந்த வெளியேறுவாரா? முருத்தெட்டுவே ஆனந்த தேரர் பகிரங்க தகவல் (Video)
நாட்டில் இன்று சிறு சிறு பிரச்சினைகள் உள்ளபோதும், தமக்காக மக்கள் சேவைக்காக அழைத்து வந்த சகோதரரான கோட்டாபய ராஜபக்சவை கைவிட்டுவிட்டு பிரதமர் மகிந்த ராஜபக்ச செல்லமாட்டார் என்பது தமது நம்பிக்கை என்று முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹி்ந்த ராஜபக்ச பதவி விலகப்போவதில்லை என்று நாட்டை பாதுகாக்கும் மக்கள் குரல் அமைப்பு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பி்ன்போது, அபேயராம விஹாராதிபதியும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் இதனை குறிப்பிட்டுள்ளார்
மஹிந்த ராஜபக்ச குறித்த தீர்மானத்தை எடுத்திருந்தால், அவர் முதன்முதலாக தமது அமைப்பிடமே தெரிவித்திருப்பார்.
எனினும் அவர் தனிப்பட்ட ரீதியில் இந்த தீர்மானத்தை எடுத்திருந்தால், அல்லது சூழ்ச்சியின் அடிப்படையில் அவர் பதவி விலகவேண்டியேற்பட்டால், அதனை மேற்கொள்ளவேண்டாம் என்று தாம் கோருவதாக தேரர் குறிப்பிட்டார்.
நாட்டில் இன்று சிறு சிறு பிரச்சினைகள் உள்ளபோதும், தமக்காக மக்கள் சேவைக்காக அழைத்து வந்த சகோதரரான கோட்டாபய ராஜபக்சவை கைவிட்டு அவர் செல்லமாட்டார் என்பது தமது நம்பிக்கை என்றும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.
இதேவேளை நாட்டை முன்னோக்கி நடத்திச்செல்ல கோட்டாபய ராஜபக்சவுக்கு நோக்கம் உள்ளபோதும் அவரின் அருகில் உள்ளவர்களே அவருக்கு தடையாக இருப்பதாக தேரர் குற்றம் சுமத்தினார்.
இதேவேளை மற்றும் ஒரு ராஜபக்ச, பிரதமராக வருவார் என்ற செய்தி தொடர்பாக தாம் எந்த கருத்தையும் வெளியிடப்போவதில்லை என்றும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டார்.

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
