வீதியெங்கும் இரத்தம்: உயிருடன் எரிக்கப்பட்ட உயிர்கள் - வடக்கு, தெற்கு இளைஞர்களுக்கு ஞாபகப்படுத்தும் மகிந்த (Video)
நாடாளுமன்றத்திற்கு குண்டுவீசி முழு நாடாளுமன்றத்தையும் அழிப்பதற்கான முயற்சியினால் ஏற்பட்ட விளைவை நாம் கண்கூடாக கண்டுள்ளோம் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்காக நேற்று மாலை நிகழ்த்திய உரையில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், அன்று நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் மறுக்கப்பட்டதன் விளைவால், வீதியெங்கிலும் இளைஞர்களின் இரத்தம் வழிந்தோடியது, டயர்களை கொண்டு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உயிருடன் எரிக்கப்பட்டனர்.
1988 மற்றும் 89களில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான இளம் உயிர்களை நம் நாடு இழக்க நேரிட்டது. அன்று நாம் எமது இளைஞர்களின் உயிர்களை காப்பதற்காக மேற்கொண்ட கஷ்டம் உங்கள் மூத்தோர்களின் நினைவிலிருக்கும் என்பதை நாம் அறிவோம்.
தெற்கு போன்றே வடக்கு இளைஞர்களுக்கும் நான் அது குறித்து ஞாபகப்படுத்த வேண்டும். அந்த கடந்த கலத்தை உங்களது பெற்றோர் மற்றும் மூத்தோர்களிடம் கேட்டறிந்து கொள்ளலாம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைககளின் கண்ணோட்டம்,



