கோட்டாபய தொடர்பில் மகிந்தவின் உறுதி! வாழ்த்துடன் பதிவு
மஹிந்த வாழ்த்து
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்றைய தினம் தனது 73ஆவது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் அவருடைய அண்ணனான, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மகிந்த ராஜபக்ச தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு 73 வயது |
அந்த பதிவில் மேலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
தனது வாழ்க்கையின் மற்றொரு ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி
கோட்டாபயவின் இருப்பு எப்போதும் வலிமையின் ஆதாரமாக இருந்து வருகிறது.
அத்துடன் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து நாட்டை கோட்டாபய மீட்டெடுப்பார் என்பதில் தான் உறுதியாக இருப்பதாகவும் மகிந்த குறிப்பிட்டுள்ளார்.
A very happy birthday to President @GotabayaR and all the very best as he steps into another year of his life. His presence has always been a source of strength and I have every assurance that he will martial this country out of this crisis.
— Mahinda Rajapaksa (@PresRajapaksa) June 20, 2022
நாமலின் பதிவு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மருமகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவும் தனது டுவிட்டர் பதிவில் கோட்டாபயவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், பிறந்த நாளைக் கொண்டாடும் கோட்டாபய ராஜபக்சவிற்கு நல்வாழ்த்துக்கள். உன்னத மும்மூர்த்திகள் இந்த ஆண்டும் எப்போதும் உங்களை ஆசீர்வதித்து வழிகாட்டட்டும். கேசரா, லிமினி மற்றும் என்னிடமிருந்து என தெரிவித்துள்ளார்.
Wishing HE @GotabayaR all the very best as he celebrates his birthday. May the noble triple gem bless & guide you this year & always. ?? from Kesara, Limini & myself.
— Namal Rajapaksa (@RajapaksaNamal) June 20, 2022