ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு 73 வயது
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிறந்த தினம் இன்றாகும். 1949 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் திகதி பிறந்த கோட்டாபய ராஜபக்சவுக்கு இன்று 73 வயதாகின்றது.
இதனிடையே ஜனாதிபதியை பதவியில் இருந்து விலகுமாறு கோரி, ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரில் ஆரம்பிக்கப்பட்ட கோட்டா கோ கம போராட்டத்திற்கும் இன்றுடன் 73 நாட்கள் பூர்த்தியாகியுள்ளன.
போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 73 நாட்கள் பூர்த்தியாகும் நிலைமையில் ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லும் அனைத்து வழிகளிலும் தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் கூடாரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் பொருளாதார, அரசியல் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. மக்கள் பெரும் பொருளாதார கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
கோட்டா கோ கம
இவ்வாறான சூழ்நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு கோட்டாபய ராஜபக்ச உட்பட ராஜபக்ச குடும்பத்தினரே பொறுப்புக் கூற வேண்டும் என குற்றம் சுமத்தி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதுடன் காலிமுகத் திடலில் கோட்டா கோ கம போராட்ட களத்திற்கு அருகில் மீண்டும மக்கள் ஒன்றுக் கூட ஆரம்பித்துள்ளனர்.