ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தொடர்பில் மகிந்தவின் பதில்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தமது கட்சியுடன் இணைந்து கொள்ளத் தீர்மானித்தால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, அவருக்கு பூரண ஆதரவளிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த பதிலை வழங்கியுள்ளார்.
ஆதரவு வழங்கல்
தேர்தலுக்கான கட்சியின் வேட்பாளர் குறித்து ராஜபக்சவிடம் கேட்டபோது, தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வேலைத்திட்டம் தங்களிடம் உள்ளது என்றும் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வேட்பாளரின் பெயரைச் சொன்னால், அவர் எவ்வளவு சக்தி வாய்ந்தவர் என்பது உங்களுக்கு புரியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கும் விடயத்தில் இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை.
ஆனால் ஜனாதிபதி தம்முடன் இணைந்துச் செல்லத் தயாராக இருந்தால், தாங்கள் அவருக்கு முழுமையாக ஆதரவளிக்கவுள்ளதாக மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

6 நாள் முடிவில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam

குணசேகரன் மற்றும் அவரது அம்மா திட்டத்தை தெரிந்துகொண்ட ஜனனி.. எதிர்நீச்சல் சீரியல் அடுத்த அதிரடி புரொமோ Cineulagam

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri
