அதிகாரத்தை கைப்பற்றும் மகிந்தவின் புதிய திட்டம்! அரசியலில் ஏற்படப்போகும் மாற்றம்
புதிய ஆண்டில் அதிகாரத்தை கைப்பற்றும் ஒரு பெரிய திட்டம் தமக்கு இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரசியலில் மாற்றம் ஏற்படும் என்றும், அதற்கு தமது கட்சி தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
சிங்களத் தமிழ் புத்தாண்டுக்குப் பிறகு, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தின் நடவடிக்கைகள், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச ஆகியோரின் தலைமையில் இன்று (20.04.2026) தொடங்கி வைக்கப்பட்டன.
கொழும்பில் வீடொன்றில் நள்ளிரவில் நடந்த பயங்கரம் - தாய், மகள் உட்பட மூவர் பலி - விசாரணையில் அதிர்ச்சித் தகவல்
இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் மற்றும் தற்போதைய உறுப்பினர்களும் கட்சி செயல்வீரர்களும் கலந்து கொண்டனர்.
மே தின கொண்டாட்டம்
இந்த நிகழ்வில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே மகிந்த இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த ஆண்டு மே தினம் பௌர்ணமி நாளில் வருவதால், எமது கட்சி மே தினத்தைக் கொண்டாடாது.
அதற்குப் பதிலாக மதரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடும் என்றுள்ளார். மேலும் தமக்கு புத்தாண்டு வெற்றியளித்தாலும், மக்கள் இம்முறை புத்தாண்டை சரியாக கொண்டாடவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
YOU MAY LIKE THIS VIDEO
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 9 மணி நேரம் முன்
தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன் விசாரிக்கப்பட்ட விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam