கனேடிய பிரதமரின் இனப்படுகொலை அறிக்கை: நிராகரிக்கும் மகிந்த..! செய்திகளின் தொகுப்பு
"போரில் துரதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் சாவடைந்தது உண்மை, அதற்காக இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்று கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது." என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களதும், தப்பிப் பிழைத்தோரினதும் உரிமைகளுக்காகவும் மற்றும் இலங்கையில் தொடர்ந்து நெருக்கடியை எதிர்கொள்வோருக்காகவும் குரல் கொடுப்பதை கனடா நிறுத்தாது என அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டி வெளியிட்ட தனது கருத்தில் கூறியிருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் ஒன்று முன்னாள் அதிபர் மகிந்தவிடம் கேள்வி எழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"கனேடியப் பிரதமரின் அறிக்கை தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள கருத்தை முழு மனதுடன் வரவேற்கின்றோம். உண்மை நிலைமையை அறியாது சர்வதேசத் தலைவர்கள் கண்டபடி அறிக்கைகளை வெளியிடக்கூடாது.
இது தொடர்பான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு.
உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்! இணையத்தில் சூடுபிடிக்கும் இருதரப்பு மோதல் Manithan
அதிர்ஷ்டத்தின் கதவைத் திறக்கும் புதன் பெயர்ச்சி : இன்று முதல் உச்ச பலன்களை பெறும் 3 ராசிகள்! Manithan