கோட்டாபய எடுக்கும் எந்த முடிவையும் ஏற்றுக்கொள்ள தயார்: மகிந்த அறிவிப்பு
பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி எடுக்கும் எந்த முடிவையும் ஏற்றுக் கொள்ள தயார் என பிரதமர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளதாக தெரியவருகிறது.
இந்த விடயத்தை மகிந்த ராஜபக்ச நேற்றைய தினம் ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
அதன்படி, தனக்கு பதில் வேறொருவரை பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்தால் அதனை ஏற்க தான் தயார் என மகிந்த குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஜனாதிபதி எடுக்கும் தீர்மானங்களை மதிக்க வேண்டும் என மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
புதிய பிரதமருடன் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் அறிவித்திருந்தார்.
அத்துடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளதாகவும் அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி...