மகிந்த மற்றும் ரணில் காலத்தில் கூட நடக்காத செயற்பாடு! மைத்திரி குணரத்ன விமர்சனம்
முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த மற்றும் ரணில் ஆகியோர் ஒருபோதும் இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவில் அரசியல் நியமனங்களை மேற்கொள்ளவில்லை என்று சட்டத்தரணி மைத்திரி குணரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க ஜே.வி.பி .கட்சியின் சட்டப் பிரிவில் செயலாற்றிய ஒருவர் என்றும் சட்டத்தரணி மைத்திரி குணரத்ன வலியுறுத்தியுள்ளார்.
பதவிகளுக்கு நியமிக்கவில்லை
அத்துடன் குற்றப் புலனாய்வுத் திணைக்கள பணிப்பாளர் ஷானி அபேசேகர, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன ஆகியோர் ஜே.பி.வி. அரசியல் கூட்டங்களில் உரையாற்றியவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனாலும் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க ஆகியோர் அரசியல் கூட்டங்களில் உரையாற்றியவர்களை இவ்வாறான பதவிகளுக்கு நியமிக்கவில்லை என்றும் சட்டத்தரணி மைத்திரி குணரத்ன விமர்சித்துள்ளார்.
டிசம்பர் மாத சிறப்பு பலன்கள்: நான்காம் இடத்தில் உச்சம் பெறும் குரு! மேஷத்துக்கு ஜாக்பாட் உறுதி Manithan
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan
வயது உண்மை தெரிந்ததும் சரவணன் எடுத்த அதிரடி முடிவு, கதறி புலம்பும் மயிலு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam