பசிலின் பதவி விலகல் அறிவிக்கப்பட்டது! நாடாளுமன்றில் பகிரங்க உரையாற்றியுள்ள மகிந்த (Live)
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்றைய தினம் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்வு முற்பகல் பத்து மணிக்கு ஆரம்பமாகியிருந்தது.
இந்த நிலையில் இன்று நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டுள்ள மகிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் இறப்பு தொடர்பில் அனுதாப உரையொன்றை ஆற்றியுள்ளார்.
அமரகீர்த்தி அத்துகோரல உயிரிழப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி கொலை தொடர்பில் 19 வயது இளைஞன் கைது |
நிட்டம்புவ பகுதியில் இடம்பெற்ற வன்முறையின் போது அமரகீர்த்தி அத்துகோரள உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து வரும் நிலையில் சம்பவம் தொடர்பில் 21 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பசில் பதவி விலகல்
அரச நிர்வாகத்தில் இனி எந்தப் பதவிகளையும் ஏற்கமாட்டேன் - பதவியை துறந்தார் பசில் |
இதேவேளை தனது தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக பசில் ராஜபக்ச நேற்றைய தினம் அறிவித்திருந்தார்.
அத்துடன் இனி வரும் நாட்களில் எந்தவொரு அரச நிர்வாக பதவிகளையும் தான் வகிக்கப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று பசிலின் பதவி விலகல் தொடர்பான நாடாளுமன்ற செயலாளர் நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.
அத்துடன் தாம் சேவையாற்றிய போது தமக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் தாம் நன்றி தெரிவிப்பதாக பசில் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மே 18ஆம் திகதி மகிந்தவின் நாடாளுமன்ற வருகை
முன்னாள் பிரதமர் மகிந்த மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் நாடாளுமன்றம் வருகை (Video) |
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச கடந்த மே 18ஆம் திகதி நாடாளுமன்றில் பிரசன்னமாகியிருந்ததாக தகவல்கள் தெரிவித்திருந்தன.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறைகளை அடுத்து முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகியிருந்தார்.
பதவி விலகியவுடன், அவர் திருகோணமலை கடற்படை முகாமில் பாதுகாப்பு காரணங்களின் நிமித்தம் தங்க வைக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் அவர் இவ்வாறு மே 18ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு வந்திருந்ததாக தெரியவருகிறது.
என்ற போதும் பிரதமர் பதவியிலிருந்து விலகிய பின்னர் மகிந்த ராஜபக்ச இன்றைய நாடாளுமன்றில் கலந்து கொண்டு பகிரங்கமாக உரையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



