22ஆவது திருத்தச் சட்டத்தால் எதை சாதிக்கப் போகின்றீர்கள்..! மகிந்த கேள்வி
அரசமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டம் மூலம் நாட்டை மீளக்கட்டியெழுப்ப முடியாது என முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
கேள்வி கேட்பவர்களிடம் மகிந்தவின் கேள்வி

மேலும் தெரிவிக்கையில், 22ஆவது திருத்தம் மீதான வாக்கெடுப்பில் நான் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று கேள்வி தொடுப்பவர்கள் அந்தத் திருத்தச் சட்டத்தால் எதைச் சாதிக்கப் போகின்றார்கள் என்பதைப் பகிரங்கமாகக் கூற வேண்டும்.
22 ஆவது திருத்தச் சட்டம் மூலம் நாட்டை மீளக்கட்டியெழுப்ப முடியாது. அனைவரும் ஓரணியில் சங்கமித்தால்தான் நாடு மீளெழுச்சி பெறும் புதிய அரசமைப்பு கொண்டு வரப்பட வேண்டும்.

இந்த நிலைப்பாட்டில் நாம் உறுதியாக உள்ளோம். அதற்கு முன்னர் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண சகலரும் ஒன்றிணைய வேண்டும் என கூறியுள்ளார்.