நிகழ்வில் கலந்து கொண்டு மூலையில் நின்ற நாமல்: தேரரின் ஆதங்கம்
ராஜபக்சமாரை யாராலும் அழிக்க முடியாது என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (18.11.2023) அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான நிகழ்வு முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் தலைமையில் நடத்தப்பட்டுள்ளது.
இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டை காப்பாற்றிய தலைவனுக்குக் கடமையாகத்தான் இந்த அஞ்சலியைச் செய்கிறேன்.
இன்று இந்த நிகழ்வுக்கு பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்தேன். சில முகங்களையே இங்கே காணக்கிடைக்கிறது. நாம் யாரும் தோற்கவில்லை. நீங்களும் தோற்றுப்போகவில்லை. நாமல் ராஜபக்ச இங்கு வந்துள்ளார்.
ஒரு மூலையில் இருக்கிறார். அப்படி இருக்க முடியாது. முன்னாள் வந்து தந்தை சென்ற பாதையில் முன்செல்ல வேண்டும். ராஜபக்சமாரை யாராலும் அழிக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan
