சீனாவிடம் ஒக்சிஜனை கோரியுள்ள இலங்கை பிரதமர்
இலங்கை சீனாவிடம் ஒக்சிஜன் மற்றும் சுவாச உதவி உபகரணங்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.
இலங்கையில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், வைத்தியசாலைகளில் இடப்பற்றாகுறை மற்றும் போதிய மருத்துவ உபகரணங்கள் என்பவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே, பிரதமர் மகிந்த ராஜபக்ச கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்திடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
சீனத் தூதுவர் பிரதமரின் கோரிக்கைக்கு சாதகமான பதிலை வழங்கியுள்ளதுடன் இலங்கைக்கு முன்னுரிமை வழங்குவதாக கூறியுள்ளார்.
இதனடிப்படையில் ஒக்சிஜன் உட்பட மருத்துவ உபகரணங்கள் தொகை ஒன்றை இலங்கைக்கு வழங்க சீன நடவடிக்கை எடுத்து வருகிறதாக கூறப்படுகிறது.
மீண்டும் தள்ளிப்போகும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. விஜய் ரசிகர்கள் அதிருப்தி Cineulagam