மகிந்த ராஜபக்ச சீனா விஜயம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksha) சீனாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்றையதினம் (27.06.2024) சீனாவுக்கு பயணித்துள்ள மகிந்த ராஜபக்ச, சீனப் பிரதமர் லீ கியாங் மற்றும் வெளியுறவு அமைச்சர் வாங் யீ ஆகியோரை சந்திக்கவுள்ளார்.
பீஜிங்கில் அமைதியான சகவாழ்வுக்கான ஐந்து கோட்பாடுகளின் 70ஆவது ஆண்டு விழாவில் கலந்துகொள்வதற்காக சீன வெளியுறவு அமைச்சரின் அழைப்பின் பேரிலேயே மகிந்த குறித்த விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.
கடன் மறுசீரமைப்பு
இந்நிகழ்வில், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், பிரதமர் லீ கியாங் மற்றும் வெளியுறவு அமைச்சர் வாங் யீ உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
மேலும், இந்த விஜயத்தின் போது, இலங்கைக்கு நன்மை பயக்கும் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் குறித்தும் மகிந்த ராஜபக்ச கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |