கொழும்பில் வாடகை வீட்டில் மகிந்த ராஜபக்ச! பின்னணியை வெளியிட்ட நாமல்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது கொழும்புக்கு வந்திருந்தாலும், தங்காலை கார்ல்டன் இல்லத்திலும், கொழும்பில் உள்ள நுகேகொடை இல்லத்திலும் மாறி மாறி தங்குவார் என்று பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்ச நுகேகொடை பகுதியில் வாடகை வீட்டில் தங்கியுள்ளார் என்ற செய்தி தொடர்பாக ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் சுதந்திரம்
ராஜபக்ச குடும்பம் யார் என்பதை அறிந்ததால், அந்த நண்பர் மகிழ்ச்சியுடன் எந்த பயமும் இல்லாமல் எங்களுக்கு வீட்டைக்கொடுத்தார் என்றும், அரசாங்கத்தின் செயல்பாடுகளை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் நாமல் சுட்டிக்காட்டியுள்ளார்.

எங்கள் நண்பர் மகிழ்ச்சியுடன் எங்களுக்கு வீட்டைக்கொடுத்தார். எங்கள் நண்பர்களுக்கு நாங்கள் யார் என்பது தெரியும். அவர்கள் இந்த அரசாங்கத்திற்கு பயப்படவில்லை. அவர்கள் பயப்படாததால் எங்களுக்கு வீடுகளைக் கொடுக்கின்றார்கள்.
அரசாங்கத்தின் நடவடிக்கை
"முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சுதந்திரம் தடையின்றி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை அவர் எதிர்கொள்கின்றார்" என்று நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.