மீண்டும் நாட்டை கைப்பற்றுங்கள்! மஹிந்தவிற்கு பகிரங்க அழைப்பு விடுத்த முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

Mahinda Rajapaksha Gotabhaya Rajapaksha Muruthedduve Aananda Tero
By Benat Oct 20, 2021 11:14 AM GMT
Report

நாட்டை   கட்டியெழுப்ப பிரதமர் மஹிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksha) நாட்டை மீ்ண்டும் கைப்பற்ற வேண்டும் என தேசத்தின் பாதுகாப்புக்கான மக்கள் குரல் அமைப்பின் ஏற்பாட்டாளர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர்(Muruthedduve Aananda Tero) தெரிவித்துள்ளார். 

கோட்டாபய ராஜபக்சவின்(Gotabhaya Rajapaksha) சுபீட்ச நோக்குடன் நாடு மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்று நினைத்தாலும், 200 சதவீத மக்கள் தற்போது அரசாங்கத்தால் ஏமாற்றமடைந்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,


கோட்டாபய ராஜபக்ச தொடர்ந்தும் ஜனாதிபதியாக பதவி வகித்தாலும் நாட்டை கட்டியெழுப்ப அனுபவமிக்க மஹிந்த ராஜபக்ச அவசியம். மஹிந்த ராஜபக்சவால் மட்டுமே நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும்.

இரசாயன உர இறக்குமதி தடையால் நாட்டினுடைய விவசாய நடவடிக்கைகள் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டுள்ளது. தான்தோன்றித்தனமான முடிவே இதற்கு காரணம். 

மஹிந்த ராஜபக்சவை நம்பியே 69 லட்சம் மக்கள் வாக்களித்தனர். நாட்டை பாதுகாக்க நினைத்தால் மஹிந்த ராஜபக்ச அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும். அரசாங்கத்திற்கு எதிராக நாலா பக்கங்களிலும் இருந்து எதிர்ப்புகள் வலுப் பெறுவதற்கு முன்னர் மஹிந்த ராஜபக்ச ஆட்சி அதிகாரத்தை பெற வேண்டும்.  நான் கட்டிய வீட்டில் உள்ள குறைபாடுகளை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

இந்தநிலையில், கோட்டாபய ராஜபக்ச மற்றும் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான தற்போதைய அரச ஆட்சிக்குக் கொண்டு வருவதில் முன்னின்று செயற்பட்டவர்களுள் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் மிகவும் முக்கியமான இடத்தை வகிக்கின்றார்.

எனினும் கடந்த சில காலங்களாக அரசாங்கத்திற்கு எதிராக கடும் விமர்சனங்களை இவர் முன்வைத்து வருவதுடன் மக்கள் இந்த அரசாங்கத்தின் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டி வருகின்றார்.

மேலும், இந்த அரசாங்கம் தற்போதைய சூழலில் மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் இந்த அரசின் எதிர்காலத்திற்கு அது பாதிப்பாக அமையும் எனவும் அவர் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US