மஹிந்த ராஜபக்சவும் சிரந்தியும் சென்ற முக்கிய நிகழ்வு!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் அவரின் பாரியாரான சிரந்தி ராஜபக்ச இன்று (10.02.2026) கொழும்பு, ஹுனுப்பிட்டி கங்காராம விகாரைக்கு வந்து வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
அச்சந்தர்ப்பத்தில் மஹிந்த ராஜபக்சவை சூழ்ந்து கொண்ட ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அரசியல் ரீதியில் எவ்வித கருத்துக்களும் தெரிவிக்கவில்லை.
'புத்த பெருமானின் புனித சின்னங்களை வழிப்படுவது கௌதம புத்தரை பார்த்த சந்தர்ப்பமாகவே கருதுகிறேன்'. அதனால் வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக வந்ததாக தெரிவித்திருந்தார்.
கங்காராமவில் கூடிய மக்கள்
கங்காராம விகாரையில் மஹிந்த ராஜபக்ச தனது பாரியாருடன் இந்தியாவின் குஜராத் மாநிலத்திலிருந்து கொண்டு வரப்பட்ட புத்த பெருமானின் புனித சின்னங்களுக்கு கௌரம் செலுத்தியதுடன் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இந்தியாவின் குஜராத் மாநிலத்திலிருந்து கொண்டு வரப்பட்ட புத்த பெருமானின் புனித சின்னங்கள் 4ஆம் திகதி முதல் 11ஆம் திகதிவரை கொழும்பு, ஹுனுப்பிட்டி கங்காராம விகாரையில் பக்தர்கள் தரிசிப்பதற்காக வைக்கப்பட்டுள்ளன.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த இடமான குஜராத்தில் 60 களில் கண்டெடுக்கப்பட்டதும் இதுவரை இந்தியாவிலிருந்து வெளியே கொண்டு செல்லப்படாததுமான இப்புனித சின்னங்களே இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.



