திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்:அநுரவுக்கு பறந்த கடிதத்தில் ஏற்பட்ட பதற்றம்
திருகோணமலை புத்தர் சிலை சம்பவத்தில் பௌத்த பிக்குகள் உட்பட பத்து பேர் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறித்து சியாம் மகா நிகாயவின் கோட்டே ஸ்ரீ கல்யாணி தர்ம மகா சங்க சபையின் தலைமை பீடாதிபதியான இத்தேபான தம்மாலங்கார தேரர் கவலை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அவசர ஒரு கடிதம் ஒன்றை அனுப்பி அவர் தெரிவித்துள்ளதாவது,
கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விடயங்கள்
பௌத்த பிக்குகள் பண்டைய மன்னர்களால் வரலாற்று ரீதியாகப் பாதுகாக்கப்பட்டு புத்த சாசனத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நிலத்தில் பிக்குகள் புத்தர் சிலையை வைத்துள்ளதாகவும், அவர்கள் வேறு எந்த குற்றங்களையும் செய்யவில்லை. சிலையை வைத்ததற்கே குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
அந்தக் கடிதத்தின்படி, ஒரு சிறிய சம்பவம் என்று விவரிக்கப்பட்டதன் அடிப்படையில் முன்னெப்போதும் இல்லாத குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச தலையீட்டால் பௌத்த பிக்குகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் புத்த சாசனத்திற்கு எதிராக வேண்டுமென்றே செய்யப்பட்ட கடுமையான குற்றம் என்று இத்தேபான தம்மாலங்கார தேரர் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பிக்குகள் உட்பட பத்து பேரையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மகாநாயக்க தேரர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.