மகிந்தவுக்கு இது தகுதியல்ல! வீட்டில் இருந்து ஒழுக்கமாக வெளியேறுமாறு அறிவித்த அரசாங்கம்

Anura Kumara Dissanayaka Mahinda Rajapaksa Government Of Sri Lanka National People's Power - NPP Nalinda Jayatissa
By Sajithra Jan 29, 2025 10:53 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு (Mahinda Rajapaksa) வழங்கப்பட்ட வீட்டை அவர், ஒழுக்கத்துடன் கையளித்து விட்டு செல்ல வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார். 

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் நேற்று (28) உரையாற்றும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் கூறுகையில், "வீட்டை கையளித்து விட்டு செல்லுமாறு நாம் அரசாங்கம் என்ற வகையில், நாடாளுமன்றத்தில் கூறியிருந்தோம். சந்திரிக்கா குமாரதுங்க, மைத்திரிபால, மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோரிற்கு புதிதாக ஒரு சட்டம் தேவையில்லை.

வெளிநாடு செல்வதற்கு இரவிரவாக வீதியில் தஞ்சமடைந்துள்ள மக்கள்! வெளியான காணொளி

வெளிநாடு செல்வதற்கு இரவிரவாக வீதியில் தஞ்சமடைந்துள்ள மக்கள்! வெளியான காணொளி

முந்தைய ஜனாதிபதிகள் 

இதற்கு முன்னர் இந்த இல்லத்தைப் பயன்படுத்திய முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் ஹேமா பிரேமதாச அதனை ஒப்படைத்துவிட்டுச் சென்றார். அதன் பின்னர் கோட்டாபய ராஜபக்சவும் அவ்வாறே செயற்பட்டிருந்தார்.


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைப் பயன்படுத்தியிருக்கவில்லை. இவர்களும் முன்னாள் ஜனாதிபதிகளே. அவ்வாறிருக்கையில் அவர்களுக்கொரு சட்டம், இவர்களுக்கொரு சட்டம் இல்லை.

மைத்திரிபால சிறிசேனவின் வீடு தொடர்பில் உயர் நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளது. பொருத்தமான வீடு தொடர்பில் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இவை அனைத்தையும் பார்த்து அவர்கள் தீர்மானம் எடுத்திருக்க வேண்டும் அல்லவா?

இலங்கை வந்த வெளிநாட்டவர்களின் மோசமான செயல்! ஹோட்டல் பெண் ஊழியருக்கு நேர்ந்த துயரம்

இலங்கை வந்த வெளிநாட்டவர்களின் மோசமான செயல்! ஹோட்டல் பெண் ஊழியருக்கு நேர்ந்த துயரம்

புனரமைப்பு செலவுகள் 

தேவை என்றால் மேலும் பல விடயங்களை கூற முடியும். இந்த வீட்டை தொடர்ந்தும் அனுபவிப்பதற்காக தாம் அதிகாரத்தில் இருந்த போது வீட்டை புனரமைத்துள்ளதாகவும் கூறமுடியும்.

மகிந்தவுக்கு இது தகுதியல்ல! வீட்டில் இருந்து ஒழுக்கமாக வெளியேறுமாறு அறிவித்த அரசாங்கம் | Mahinda Rajapaksa House Issue Gov Revealed Details

அத்துடன், தமது ஆட்சி காலத்தில் அரச பணத்தை செலவு செய்து தமது வாழ்நாட்களின் நலனுக்காக உருவாக்கி கொண்ட வீடாக உள்ளது. குறித்த வீட்டை புனரமைப்பதற்கு 2021ஆம் ஆண்டிலிருந்து 2023ஆம் ஆண்டு வரை மாத்திரம், 472.52 மில்லியன் ரூபாவை செலவு செய்துள்ளனர்.

கட்டடத்தின் உபகரணங்களுக்காக 140 மில்லியன் ரூபாவும், சிவிலிங் வேலைகளுக்காக 30.5 மில்லியன், வடிவமைப்பு உற்பத்திக்காக 32.17 மில்லியன், மின்சார உபகரணங்களுக்கு 38.9 மில்லியன், பலகை கொள்வனவு 36.3 மில்லியன், தரைக்கான மர வேலைப்பாடுகளுக்கு (மரத்தளம்) 35.17, க்ரனைட்டுக்கு 15.8 குளிரூட்டி கட்டமைப்புக்கு மற்றம் 46.9 மில்லியன் என செலவு செய்துள்ளனர்.

மகிந்தவுக்கு இது தகுதியல்ல! வீட்டில் இருந்து ஒழுக்கமாக வெளியேறுமாறு அறிவித்த அரசாங்கம் | Mahinda Rajapaksa House Issue Gov Revealed Details

இதன் மொத்தம் 472.52 மில்லியன் ரூபாவாகும். உண்மையிலேயே இது அரசாங்கத்திற்கு பாரமாகும். இயலுமானவரையில் வீட்டை நாங்கள் அரசாங்கத்திடம் கையளிக்குமாறு கூறியுள்ளோம்.

கடிதம் அனுப்பினால் தான் வெளியேறுவோம் என்றும் சிலர் கூறிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் சாதாரண மக்கள் அல்ல. முன்னாள் ஜனாதிபதிகளாவர். எனவே இவர்கள் இவ்வாறு செயற்படுவது அவர்கள் வகித்த பதவிக்கு தகுதியானதல்ல.

எனவே பூதங்களைப் போன்று இல்லங்களைப் பிடித்துக் கொண்டிருக்காமல் ஒழுக்கமாக வெளியேறிவிட வேண்டும். மேலும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் குறித்த வீட்டை அரசாங்கத்திற்கு கையளிப்பார் என நாம் எதிர்பார்க்கின்றோம்” என குறிப்பிட்டுள்ளார். 

வெளிநாடொன்றில் தப்பியோடிய இலங்கையர்களால் அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

வெளிநாடொன்றில் தப்பியோடிய இலங்கையர்களால் அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US