இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களை கடுமையாக எச்சரித்த பிரதமர் மஹிந்த
பொதுஜன பெரமுன கட்சியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கட்சியின் தலைவரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமகால அரசியல் செயற்பாடுகளில் இளம் உறுப்பினர்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என பிரதமர் கடும் தொனியில் எச்சரித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன
நேற்றைய தினம் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் வழங்கிய ஆதரவினை கருத்திற் கொண்டுஅனைவரும் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும்.மேலும் குழுவின் ஒற்றுமையை பாதுகாக்க வேண்டும். ஒற்றுமை மிகவும் முக்கியம். பிரிவினை ஏற்பட்டால் பாரிய அழிவு ஏற்படும்.
எனது 50 வருட அரசியல் வாழ்க்கை அனுபவத்தில் இந்த விடயத்தை நான் உங்களுக்கு கூறுகின்றேன்.
அமைச்சர் விமல் வீரவன்ச தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் ஆளும் கட்சியின் இளம் உறுப்பினர்களை பிரதமர் கடுமையான எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 19 மணி நேரம் முன்
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam