பெரிய சிக்கல் வரலாம்! அதை யாராலும் தடுக்க முடியாது - கொழும்பு மக்கள் எச்சரிக்கை
நாமல் ராஜபக்சவின் மகனுக்கு கூட வாக்களித்து விடாதீர்கள் என கொழும்பு மக்கள் இலங்கையர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொழும்பில் திடீரென பொலிஸார் மற்றும் படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்கவுள்ளதாகவும், அதற்காகவே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் விறுவிறுப்பான கருத்துக்கள் பகிரப்பட்டு வந்தன.
இவ்வாறான சூழலில் மகிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராக பதவியேற்பது தொடர்பில் கொழும்பு மக்களிடம் லங்காசிறி செய்தி சேவை கருத்துக்களை பதிவு செய்திருந்தது.
இதன்போது கொழும்பு மக்கள் பலர் கூறும்போது, அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வரும் ஆட்சியை போன்றே தொடர்ந்து முன்னெடுத்துக் கொண்டு சென்றால் நாட்டை ஓரளவு நல்ல நிலைமைக்கு கொண்டு வர முடியும். கொண்டு வர வேண்டும்.
இல்லையென்றால் நாட்டில் பெரிய பிரச்சினையொன்று வருவது உறுதி. அதை யாராலும் தடுக்க முடியாது என எச்சரித்துள்ளனர்.
மேலும், மகிந்தவின் குடும்பத்தில் மீண்டும் மாட்டிக் கொள்ள வேண்டாம் எனவும், நாமல் ராஜபக்சவின் மகனுக்கு கூட வாக்களித்து விடாதீர்கள் எனவும் இலங்கையர்களிடம் கோரியுள்ளனர்.





ஐ.நா வினால் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முடியுமா..! 4 மணி நேரம் முன்

புதிய கட்டத்திற்கு நகரும் கனடா-இந்தியா உறவுகள்: மீண்டும் நம்பிக்கையை கட்டியெழுப்ப முயற்சி News Lankasri

பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
