விமல் வீரவங்சவை ஓணானுக்கு ஒப்பிட்ட மகிந்த பத்திரன
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆலோசகரும் இலங்கை பத்திரிகை சபையின் தலைவருமான மகிந்த பத்திரன,(Mahinda Pathirana) அமைச்சர் விமல் வீரவங்சவை ஓணானுக்கு ஒப்பிட்டு தனது சமூக வவலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
அரசாங்கம் செய்யும் அனைத்து நல்ல பணிகளின் கௌரவத்தை தனக்கு சாதகமான பயன்படுத்திக்கொள்ளும் அதேவேளை தவறுகள் அனைத்தையும் ராஜபக்சவினர் மீது சுமத்தும் செயற்பாடுகளில் விமல் வீரவங்ச (Wimal Weerawansa) உள்ளிட்ட தரப்பினர் ஈடுபட்டுள்ளனர் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
விமல் வீரவங்ச, சேதனப் பசளை விவசாயம் தொடர்பான முடிவு தவறு எனக் கூறி அதனை விமர்சித்ததை இன்று கண்டேன். உண்மையில் இந்த முடிவு சரியா, பிழைய என கூற இன்னும் காலம் தேவை.
அது சரியான முடிவாக இருந்தால், அதன் சாதகத்தை பெற முதலில் வந்து நிற்பவர் விமலசிறி கம்லத். ( விமல் வீரவங்சவின் பழைய பெயர்). ராஜபக்ச அரசாங்கத்தில் செய்த நல்ல பணிகளை இந்த இரண்டு மூன்று பேர் மாத்திரமே செய்துள்ளனர்.
தனியாக செய்தால் தவறுகள் அனைத்து ராஜபக்சவினர் செய்தது. இவை எல்லாவற்றையும் செய்தது யானை என மரத்தை சாய்த்த யானையின் மீது ஏறி இருந்த ஓணான் கூறிய கதை போல வீரவங்சவின் கதை இருப்பதாக மகிந்த பத்திரன குறிப்பிட்டுள்ளார்.
சேதனப் பசளைகளை மாத்திரம் பயன்படுத்த வேண்டும் என்ற விவசாய கொள்கையில் இருந்த அரசாங்கம் உடனடியாக விலக வேண்டும் எனவும் இதன் மூலம் ஏற்கனவே செய்த தவறை உடனடியாக திருத்திக்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் விமல் வீரவங்ச கூறியிருந்தார்.
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)
தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 3 நாட்கள் முன்
![3வது முறையாக கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகர் மனைவி.. கோலாகலமாக நடந்த சீமந்தம், போட்டோஸ் இதோ](https://cdn.ibcstack.com/article/0f12e7dd-4f06-4f16-9cff-9dcc24c47c7e/25-67ac877857c80-sm.webp)
3வது முறையாக கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகர் மனைவி.. கோலாகலமாக நடந்த சீமந்தம், போட்டோஸ் இதோ Cineulagam
![Viral Video: மின்னல் வேகத்தில் சென்ற இரண்டு பாம்புகள்... படம்பிடித்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி](https://cdn.ibcstack.com/article/5d3f63f4-4425-4687-9657-0766415ab801/25-67ac3325b20aa-sm.webp)
Viral Video: மின்னல் வேகத்தில் சென்ற இரண்டு பாம்புகள்... படம்பிடித்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி Manithan
![புதுத்தொழில் தொடங்கிய முத்து.. வயிற்றெரிச்சலில் விஜயா செய்த காரியம்! சிறகடிக்க ஆசை ப்ரோமோ](https://cdn.ibcstack.com/article/f581024d-b018-48eb-acc5-84414573be7c/25-67acb61f83461-sm.webp)