பெருந்தொகையான கட்டணத்தை செலுத்தாமல் அநுர அரசை ஏமாற்றிய மகிந்த குடும்பம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வசித்து வந்த கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள வீட்டின் மின்சாரம் மற்றும் நீர் விநியோக இணைப்புகளை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மின்சாரம் மற்றும் நீர் கட்டண நிலுவை தொகை காரணமாக நேற்று முன்தினம் அவற்றினை துண்டிக்க அதிகாரிகள் சென்றதாக தெரியவந்துள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அதிகாரிகள் நீர் இணைப்பை துண்டிக்க அங்கு சென்றிருந்தனர். மேலும் ஒரு லட்சம் ரூபாய் நிலுவைத் தொகை காரணமாக மின்சார வாரியமும் மின்சாரம் துண்டிக்க அங்கு சென்றிருந்தது.
நீர் கட்டணம்
பாதுகாப்பு பணியாளர்கள் மட்டுமே அங்கு இருந்ததால் துண்டிக்காமல் அதிகாரிகள் திரும்பி வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இது குறித்து விசாரித்த போது, அந்த வீட்டிற்கு 6 லட்சம் ரூபாய் நிலுவைத் தொகை இருப்பதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார்.
அத்தகைய நிலுவை தொகை தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கான வழக்கமான நடைமுறைக்கமைய, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள வீட்டிற்கு நீர் விநியோகத்தை துண்டிக்க தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை ஊழியர்கள் நேற்று முன்தினம் சென்றுள்ளனர்.
மகிந்த தரப்பு
வீட்டில் நிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள், நீர் கட்டண பற்றாக்குறை குறித்து பொறுப்பான நபர்களுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியமையினால் நீர் விநியோகத்தை துண்டிக்கப்படவில்லை.
விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள வீடு இன்னும் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படவில்லை.
அரசாங்க சொத்து ஆய்வாளர்கள் மகிந்த ராஜபக்சவுக்குச் சொந்தமான பொருட்களை வரிசைப்படுத்தி அகற்றிய பின்னர் வீடு அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படும் என மகிந்த தரப்பு தெரிவித்துள்ளது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 நாட்கள் முன்

கதிர் சட்டையை பிடித்த குணசேகரன், தர்ஷனை தண்டிக்க நினைக்கும் பார்கவி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
