மகிந்த - கருணா - பிள்ளையான் ஒரே அணி..! அக்கரைப்பற்றில் நடந்த படுகொலை: காலம் கடந்து வெளியாகும் தகவல்
கருணா, பிள்ளையான், மகிந்த ராஜபக்ச இவர்கள் இரண்டு குழுக்கள் அல்ல, ஒரு குழுவாகவே தான் நான் பார்க்கிறேன் என காணாமல் ஆக்கப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் பிரகித் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட தெரிவித்துள்ளார்.
தனது கணவர் எக்னலிகொட கடத்தப்பட்டதில் மகிந்த, கருணா, பிள்ளைாயனுக்கு தொடர்பு இருப்பதாக தான் அறிவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை மகிந்த ராஜபக்ச அவருடைய அரசியலை நிலை நிறுத்துவதற்காக இந்த மண்ணில் கருணாவையும், பிள்ளையானையும் பாவித்துள்ளார்.
இந்த மண்ணில் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் ஆயுதங்களை ஏந்தாத எங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் என கருணாவும், பிள்ளையானும் சேர்ந்து முத்திரை கத்தியது கடந்த காலங்களில் உங்கள் அனைவருக்கும் தெரியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது கணவன் கடத்தப்பட்ட நிலையில் இறுதியாக அக்கரைப்பற்று பகுதியில் வைத்தே தனது கணவன் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் சந்தியா எக்னலியகொட தெரிவித்துள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
ராஜினாமா செய்த ஜெயசூரியா: இந்தியாவிற்கு உலகக்கிண்ணத்தைப் பெற்று தந்தவரை நியமித்த இலங்கை News Lankasri