அநுர தரப்புக்கு சவாலாக மாறியுள்ள மகிந்தவின் விவகாரம்! எச்சரிக்கும் முன்னாள் எம்.பி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ள இல்லத்தை மீளப் பெறுவதற்கான சட்ட ரீதியான அதிகாரம் அராங்கத்துக்கு இல்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த தெரிவித்துள்ளார்.
இதன்படி மக்கள் இந்த உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
“தேசிய ரீதியில் ஏற்பட்ட மின்தடைக்கு குரங்குகள் மீது பழிபோடும் அரசாங்கத்திடம் நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு எவ்வித தீர்வுகளும் இல்லை.
பாரிய மோசடி
எனினும் இழப்பீடுகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்
அதற்கமைய குற்றம் செய்யத் தூண்டியவர்களுக்கு எதிராக எம்மால் நீதிமன்றம் செல்ல முடியும். அதற்கமைய நீதிமன்றத்தின் ஊடாக அவர்களிடமிருந்து இழப்பீட்டைப் பெற்று, அதனை மீள அரசாங்கத்திடம் கையளிக்க முடியும்.
இலங்கை சுங்க வரலாற்றில் பாரிய மோசடியாக 300க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமையைக் குறிப்பிடலாம்.
அதனையும், தண்ணீரில் அடங்கியுள்ள புற்றுநோய் மூலக்கூறுகள் தொடர்பான சர்ச்சையையும், நெல்லுக்கான உத்தரவாத விலை குறித்த சிக்கல்களையும் மறக்கச் செய்வதற்காக தற்போது முன்னாள் அமைச்சர்களும், எம்.பி.க்களும் பெற்றுக் கொண்ட இழப்பீட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரப்பட்டவாறு இந்த இழப்பீடுகள் மதிப்பீடு செய்யப்பட்ட முறைமையை தொடர்பில் எனக்கு தெரியப்படுத்துங்கள்.
அனர்த்த முகாமைத்துவ சட்டம்
25 இலட்சம் அதிகபட்ச இழப்பீடு தொடர்பிலும் தற்போது பேசப்படுகிறது. அனர்த்த முகாமைத்துவ சட்டம் என்பது இயற்கை பேரிடர்களால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களுக்காக நிவாரண கொடுப்பனவு வழங்கும் முறைமையாகும்.
எவரேனும் ஒருவரது பரம்பரை சொத்துக்களை அழிக்கும் உரிமை யாருக்கும் இல்லை. அவற்றை அனர்த்த முகாமைத்துவ சட்டத்தின் கீழ் மதிப்பீடு செய்யவும் முடியாது.
எனவே அனர்த்த முகாமைத்துவ சட்டத்தைக் காண்பித்து மக்களை ஏமாற்ற வேண்டாம் என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் கேட்டுக் கொள்கின்றேன்” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)
தையிட்டி விகாரை : என்ன செய்யலாம் 4 நாட்கள் முன்
![பிரித்தானியாவின் Skilled Worker Visa தகுதி பட்டியலில் இடப்பெற்றுள்ள வித்தியாசமான வேலைகள்](https://cdn.ibcstack.com/article/9f7af4bd-8989-4057-b959-5e1fd4469ae7/25-67ade20235fa6-sm.webp)
பிரித்தானியாவின் Skilled Worker Visa தகுதி பட்டியலில் இடப்பெற்றுள்ள வித்தியாசமான வேலைகள் News Lankasri
![Neeya Naana: கொன்றுவேன்... கோபிநாத் முன்பு தங்கையை கண்டித்த அக்கா! அரங்கத்தில் நடந்தது என்ன?](https://cdn.ibcstack.com/article/19c68b2f-82ec-486a-8131-35e0c9613544/25-67aca8f5b7054-sm.webp)