தேரருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிரதமர் மஹிந்த
பௌத்த மதத் தலைவர்களுடன், சமகால அரசாங்கம் முரண்டு வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாரஹென்பிட்டி அபயராமையில் பிரதானியான முருத்தொட்டுவே ஆனந்த தேரரும் அரசாங்க தரப்பினர் முரண்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக முருத்தொட்டுவே தேரர் செயற்பட்டார்.
அண்மையில் அவரது விகாரையில் கொவிட் தடுப்பூசி வழங்கும் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், எவ்வித காரணமும் அறிவிக்காமல் திடீரென அந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு வருகைத்தந்திருந்த வைத்திய ஊழியர்கள் தடுப்பூசி செலுத்த முடியாமல் அங்கிருந்து சென்றுள்ளனர்.
இது தொடர்பில் தகவல் வெளியிட்ட அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி தான் அந்த நடவடிக்கையை நிறுத்துமாறு ஆலோசனை வழங்கவில்லை என பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த ஆனந்த தேரர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் மிகவும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் முடிவாக தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பிரதமர், எதிர்க்கட்சி தலைவராக செயற்பட்ட காலப்பகுதியில் அபயராமையில் உள்ள அலுவலகத்தில் தனது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.
இதற்கு முன்னர், ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கிய எல்லே குணவங்ஸ தேரரும் அரசாங்கத்திற்கு எதிராக தனது கருத்துக்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 7 மணி நேரம் முன்

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri
