சீனக் கடன் தொடர்பில் மௌனம் காப்பது ஏன்..! மஹிந்த தேசிங்க கேள்வி
சீனாவிடம் இருந்து இலங்கை அரசாங்கம் பெற்றுக் கொண்ட கடன் தொடர்பில் இலங்கை அரசாங்கமும், சீன அரசாங்கமும் ஏன் மௌனம் காக்கின்றனர் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த தேசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்றையதினம் (21.09.2023) யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைக்கு கடன் வழங்கிய நாடுகளில் சீனா முதலிடம் வகிக்கின்ற நிலையில் தற்பொழுது ஐ.எம்.எப் ஏற்கனவே கடன் வழங்கி உள்ள நிலையில் தற்போது சீனக் கடன் சம்பந்தமாக அறிக்கையைக் கேட்ட போது இலங்கை அரசாங்கம் வாய் திறக்கவில்லை.
கடனுக்கான காலம் நீடிப்பு
சீன அரசாங்கமோ இலங்கைக்கு வழங்கிய கடனுக்கான கால நீடிப்புத் தொடர்பில் எதுவித கருத்துக்களும் கூறவில்லை.
எனவே கடந்த காலத்தில் மத்திய வங்கி ஆளுநர் எமது நாடு வெளிநாட்டில் பெற்ற கடன்களை திருப்பி செலுத்தாது என வெளிப்படையாக கூறியமை பிரச்சினையை ஏற்படுத்தியிருந்தது.
எனவே தற்போது ஐ.எம்.எவ் இடம் கடன் வாங்கினால் போடும் அனைத்து நிபந்தனைகளுக்கும் இலங்கை உட்பட வேண்டிய நிலைமை ஏற்படுகின்றது.
அதுமட்டுமல்ல அதை வெளிநாடுகளைப் பெற்ற கடனுக்கு அந்த நாடுகள் விதிக்கின்ற நிபந்தனைகளுக்கும் நாடு செவிமடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
ஒன்பது ரில்லியன் ரூபாய் கடன்
இலங்கை சீனாவிடம் மட்டுமன்றி இந்தியாவிடமும் கடன்களை வாங்கியுள்ள நிலையில் இந்தியா விதிக்கும் நிபந்தனைக்கும் உற்பட வேண்டிய தேவை உள்ளது.
அபிவிருத்தி செய்வதற்காக வெளிநாட்டிலிருந்து ஒன்பது ரில்லியன் ரூபா கடன் வாங்கப்பட்டிருக்கின்றது.
ஆனால் கணக்காய்வு திணைக்களம் கூறி இருக்கின்றது, வாங்கப்பட்ட கடனில் மூன்று ரில்லியன் ரூபா மாத்திரமே அபிவிருத்தி செய்யப்பட்டிருக்கின்றது. மிகுதி 9 ரில்லியன் ரூபா கொள்ளை அடிக்கப்பட்டு ஊழல் செய்யப்பட்டு இருக்கின்றது.
ஆகவே எமது நாட்டையும் மக்களையும் 75 வருடமாக ஆண்ட ஆட்சியாளர்கள் நாட்டையும் மக்களையும் பின்னோக்கி நகர்த்தியுள்ள நிலையில் தற்போது வெளிநாட்டுக் கடன் தொடர்பில் சரியான தீர்மானம் ஒன்றை எடுக்க முடியாத நிலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
