மெக்சிக்கோவில் காட்சிப்படுத்தப்பட்ட வேற்றுகிரகவாசிகளின் உடல்கள் : அம்பலமாகிய உண்மை
கடந்த சில நாட்களுக்கு முன் மெக்சிக்கோவில் காட்சிப்படுத்தப்பட்ட வேற்றுகிரகவாசிகளின் உடல்கள் உண்மையானவை அல்ல என தெரியவந்துள்ளது.
சுமார் 1000 ஆண்டுகள் பழமையானவை என தெரிவிக்கப்பட்ட வேற்றுகிரகவாசிகள் உடல்கள் சமீபத்தில் தயாரிக்கப்பட்டவை என ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த போலி மனித உடலங்கள் விலங்குகள் மற்றும் மனிதர்களின் எலும்புகள் இணைந்த செயற்கை பசையுடன் உருவாக்கப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தாவர இலைகள் மற்றும் செயற்கை பசைகள் ஆகியவை எலும்பு மற்றும் தோலை உருவாக்க பயன்படுத்தப்பட்டிருப்பதாக பெருவின் சட்ட மருத்துவம் மற்றும் தடய அறிவியல் கழகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.
மெக்சிக்கோவில் சமீபத்தில் காங்கிரஸ் பிரதிநிதிகள் சபையில் எம்.பிக்கள் மற்றும் ஆய்வாளர்கள் மத்தியில் ஊடகவியலாளரும், ஏலியன்கள் தொடர்பான ஆர்வலருமான ஜெய்ம் மௌசன் 1000 ஆண்டுகள் பழமையான ஏலியன் உடலங்கள் கிடைக்கப் பெற்று இருப்பதாக அறிவித்தார்.
ஜெய்ம் மௌசன் வழங்கிய விளக்கம்
ஏற்கனவே உலகம் முழுவதும் ஏலியன் மற்றும் அவர்கள் பயணிக்கும் பறக்கும் தட்டுகள் குறித்த செய்திகள் பரவி வந்து கொண்டு இருக்கும் போது, ஜெய்ம் மௌசனின் அறிவிப்பு பெரும் கவனத்தை பெறத் தொடங்கியது.
பெரிய பின் தலை பகுதி, கையில் 3 விரல்கள், மற்றும் அளவில் சிறிய உடல், அத்துடன் இவை கார்பன் பரிசோதனையில் 1000 ஆண்டுகள் பழமையானவை என ஜெய்ம் மௌசன் வழங்கிய விளக்கம் ஆகியவற்றை தொடர்ந்து இது சர்வதேச நாடுகளின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது.
மேலும் இந்த ஏலியன் உடல்களில் முட்டைகள் இருந்தாகவும் மெளசன் தெரிவித்தார். இந்நிலையில் பெரும் சர்ச்சையை உருவாக்கிய மெளசன் சமர்பித்த ஏலியன் உடலங்கள் சமீபத்தில் தயாரிக்கப்பட்டவை என்று ஆய்வு முடிவுகளில் கண்டறியப்பட்டுள்ளமை இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri
