பதவி விலகிய பின்னர் முதன் முறையான ஆளும் கட்சி கூட்டத்தில் மகிந்த!
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச நேற்று இடம்பெற்ற ஆளும் கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
பிரதமர் பதவியில் இருந்து விலகியதன் பின்னர், ஆளும் கட்சி உறுப்பினர்களின் குழுக் கூட்டத்தில் மகிந்த ராஜபக்ச பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.
அவர் ஆபத்தான நிலையில் கொழும்பில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், பின்னர் அந்த செய்திகள் பொய்யானது எனவும் சமூக ஊடகங்களில் அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.
மேலும், சில சமூக வலைதளங்களில் அவர் உயிர் இழந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய பின்னர் மகிந்த ராஜபக்ச கடந்த மே மாதம் 9ஆம் திகதி பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.