கொழும்பில் திருமண நிகழ்வில் அவசர தொலைபேசி அழைப்பை எடுத்த மகிந்த-அரசியல்வாதியிடம் விடுத்த கோரிக்கை
கொழும்பு ஷெங்க்ரிலா ஹோட்டலில் நேற்று தினம் பிரபல நிறபூச்சு நிறுவனத்தின் வர்த்தகரின் மகளது திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்திற்கு இலங்கையில் பிரபலமான அரசியல்வாதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
பிற்பகல் ஒரு மணியளவில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அந்த வைபவத்தில் கலந்துககொண்டார்.
எனக்கு கொள்கை இருக்கின்றது- ராஜித
அங்கு சென்ற அவர் உடனடியாக“ எங்கே ராஜித இருக்கின்றாரா?” எனக் கேட்டுள்ளார். ராஜித சேனாரத்ன திருமண நிகழ்வுக்கு வரவில்லை என்பதை அறிந்துக்கொண்ட மகிந்த ராஜபக்ச, உடனடியாக ராஜிதவுக்கு தொலைபேசி அழைப்பொன்றை எடுத்துள்ளார். “
ராஜித நீங்கள் அரசாங்கத்தில் இணைய போவதாக கதை ஒன்று இருக்கின்றதே? வாருங்கள், வாருங்கள் துரிதமாக அரசாங்கத்திற்கு வந்து இதனை முன்னெடுத்துச் செல்ல இணையுங்கள்.பெரிய வேலைகளை செய்ய வேண்டியுள்ளது.” என மகிந்த ராஜபக்ச, ராஜிதவிடம் கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள ராஜித சேனாரத்ன, “ இப்படி கூறினால் முடியாது. எனக்கு கொள்கை இருக்கின்றது. அனைத்தையும் ஆராய்ந்து பார்த்தே நான் முடிவு ஒன்றை எடுப்பேன்.” எனக்கூறியுள்ளார்.
ஜோன்ஸ்டன் உள்ளிட்டோருக்கு அமைச்சு பதவியை வழங்க வேண்டிய அவசியமில்லை
“ ஜோன்ஸ்டன், மகிந்தானந்த, ரோஹித் போன்றவர்கள் தொடர்பில்தானே உங்களுக்கு பிரச்சினை?.அதனை பிரச்சினையாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
அவர்கள் அமைச்சு பதவிகளை கோரினாலும் வழங்க வேண்டிய அவசியமில்லை என நான் ரணிலிடம் கூறியுள்ளேன்.எதிர்காலத்தில் அமைச்சு பதவிகளை வழங்குவதாக கடிதத்தை மாத்திரம் வழங்குமாறு கூறியுள்ளேன்.
அந்த பிரச்சினை அப்படியாக தீர்க்கப்படும்.நீங்கள் அரசாங்கத்திற்கு வாருங்கள்.வந்து பணியாற்றுங்கள்” என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ராஜித சேனாரத்ன மகிந்த ராஜபக்ச கூறிய அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தார் எனவும் எனினும் பதிலளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.