சமூக வலைத்தளங்களில் பிரபலமடைந்த மகிந்தவின் நெருங்கிய விசுவாசி கைது
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மகிந்த கஹந்தகமகே குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அலரி மாளிகைக்கு முன்பாகவும், காலி முகத்திடல் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் வன்முறைச் சம்பவம்

கடந்த ஒன்பதாம் திகதி கொழும்பில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களாக அவர் உள்ளிட்ட குழுவினரை கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட பல அரசியல்வாதிகளை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமூக வலைத்தளத்தில் பிரபலம்

கைது செய்யப்பட்ட மகிந்த கஹந்தகமகே கடந்த ஒன்பதாம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்களால் ஆடை களையப்பட்டு, உயிரிழந்தவர் போன்று காட்சிகளை இணையத்தில் வெளியிட்டிருந்தனர். பல்வேறு மீம் கிரியேற்றர்களும் இவரின் புகைப்படங்களை பல கோணங்களில் நகைச்சுவையாக்கி இருந்தன.
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் நெருக்கிய ஆதரவாளரும் நண்பருமான மகிந்த கஹந்தகமகே, மகிந்த பதவி விலகக் கூடாது என்ற கோஷத்துடன் வன்முறையான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan