டொலர், வெளிநாட்டு கையிருப்பு இல்லை! நாம் உண்மையில் மரணத்தின் விளிம்பில் இருக்கிறோம் - அமைச்சர் பகிரங்கம்
தற்போது நாட்டில் டொலர்கள் இல்லை, வெளிநாட்டு கையிருப்பு இல்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
தற்போது நாட்டில் டொலர்கள் இல்லை. வெளிநாட்டு கையிருப்பு இல்லை. நாம் உண்மையில் மரணத்தின் விளிம்பில் இருக்கிறோம்.
இப்போது எங்களிடம் அதிக எண்ணிக்கையிலான புற்றுநோயாளிகள் உள்ளனர், இது அதிகரித்து வருகிறது. இதனை குறைக்க வேண்டிய அவசியம் உள்ளது.
இந்த நேரத்தில் அரசியல் பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இருப்பவர்களை எப்படி வெளியேற்றுவது, எப்படி பதவிகளை எடுப்பது என்பது முக்கியமல்ல.
ஜனாதிபதியை சந்தித்த போது சர்வகட்சி மாநாட்டை முன்மொழிந்தோம். மனிதர்கள் படும் துன்பங்களைப் பற்றி அவரிடம் கூறினோம்.
அண்மைக்காலமாக டீசல் வாங்க மக்கள் வரிசையில் நிற்கின்றனர். வரிசையில் போய் இன்னும் விலை உயர்ந்த டீசலை நிரப்பிக்கொண்டு, எரிபொருள் தீரும் வரை எரிவாயு தேடி அலைய வேண்டும்.
இது ஒருவரது தவறு அல்ல, இந்த முழு அரசாங்கத்திலும் ஏதோ தவறு இருக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், தேசிய அரசாங்கம் பயனற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
பிரித்தானியாவில் பெண் காவலரின் பொய் துஷ்பிரயோக குற்றச்சாட்டு: மீண்டும் சிறையில் அடைப்பு News Lankasri
விஜய்யை பார்க்காமல் செல்ல மாட்டேன் - உத்தரபிரதேசத்தில் இருந்து 2,700 கி.மீ நடந்து வந்த இளைஞர் News Lankasri
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri