அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள தனுஷ்க தொடர்பில் மஹேலவின் நிலைப்பாடு
இலங்கை கிரிக்கட் அணியின் வீரர்கள் தாம் இழைக்கும் குற்றங்களுக்கு தாமே பொறுப்பு கூற வேண்டும் என இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகர் மஹேல ஜயவர்தன தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு பிணை வழங்க சிட்னி நீதிமன்றம் மறுத்துள்ளது. இதன் காரணமாக அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகர் மஹேல ஜயவர்தன
கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் கைது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள, இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகர் மஹேல ஜயவர்தன, இலங்கை கிரிக்கட் அணியின் வீரர்கள் தாம் இழைக்கும் குற்றங்களுக்கு தாமே பொறுப்பு கூற வேண்டும் என கூறியுள்ளார்.
இருபதுக்கு 20 உலக கிண்ண போட்டிகளில் விளையாட அவுஸ்திரேலியா சென்ற இலங்கை கிரிக்கெட் அணி இன்று நாடு திரும்பியுள்ளது.
இலங்கை அணியுடன் நாடு திரும்பிய மஹேல ஜயவர்தனவிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.