மகளை பிரிந்திருக்க முடியாது நாடு திரும்பும் மஹேல ஜயவர்தன
இலங்கை கிரிக்கட் அணியின் ஆலோசகராக கடமையாற்றிய மஹேல ஜயவர்தன(Mahela Jayawardena) நாடு திரும்புவதாக அறிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்பொழுது நடைபெற்று வரும் டுவன்ரி20 உலகக் போட்டித் தொடரின் இலங்கை அணியின் ஆலோசகராக மஹேல கடமையாற்றி வருகின்றார்.
இந்த நிலையில் நீண்ட நாட்கள் உயிர்குமிழி (bio-bubble)ல் தனித்திருந்து களைப்படைந்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த 145 நாட்களாக உயிர்குமிழி முறையில் தனித்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இன்றைய தினம் நடைபெறும் முதல் சுற்றுப் போட்டியுடன் தாம் நாடு திரும்புவதாக மஹேல தெரிவித்துள்ளார்.
நீண்ட காலம் மகளை பிரிந்திருந்த காரணத்தினால் தாம் நாடு திரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அணியுடன் இணைந்திருக்கப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan