மகாவலி கங்கையின் நீரை பாவிப்போருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்
கட்டுகஸ்தோட்டை கொஹாகொட தேக்கவத்தை குப்பை மேட்டில் இருந்து வெளியேறும் இரசாயனங்களால் மகாவலி கங்கையின் நீர் பாரிய மாசுக்கு உள்ளாக்கப்படுவதாக (Dynasty Environment protection society) நடத்திய பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
கண்டி மாநகர சபையால் 45 வருடங்களாக நடத்தப்பட்டு வரும் குறித்த குப்பை மேட்டில் பாரிய சுகாதார,சுற்றாடல் கோடு நடந்துள்ளமை தெரியவந்துள்ளது.
குப்பை மேடு பரிசோதனை
இது தொடர்பில் நீண்ட காலமாக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலேயே இந்த குப்பை மேடு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
பௌத்த குருமாரின் வேண்டுகோளுக்கிணங்க Dynasty Environment protection society தலைவர் மஹேசன் சமரவிஜய நடத்திய பரிசோதனைகளை அண்மையில் ஊடகங்கள் மற்றும் சமூக ஆர்வளர்களுக்கு விளக்கப்படுத்தினார்.
அவர் அந்து கருத்துக்களை தெரிவிக்கும் போது தாங்க முடியாத துன்பத்தில் கண்ணீர் விட்டார்.
தேசிய பிரச்சினை
கொஹாகொட குப்பை மேட்டால் மகாவலி கங்கையில் இரசாயனங்கள் மிதப்பதாகவும் அந்த நீரை மக்கள் குடிப்பதாகவும் அதிர்ச்சி அளிக்கும் தகவல்களையும் தெரிவித்த அவர், அதனாலே கண்டியில் பல சுகாதார கேடுகளும் கண்டறிப்படாத நோய்கள் ஏற்படுகிறது.
இது பாரிய தேசிய பிரச்சினையாக உருவாகியுள்ளது.
இதற்கு பொறுப்பான மகாவலி அதிகார சபைக்கு தெரியபடுத்த வேண்டும் மேலும் ஜனாதிபதிக்கும் தெளிவுபடுத்த வேண்டும் என அதன் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.



