'டித்வா'வில் பாதிக்கப்பட்ட பல்கலை மாணவர்களுக்கு விசேட புலமைப்பரிசல்
'டித்வா' சூறாவளியின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு மஹாபொல நிதியத்தால் விசேட புலமைப்பரிசில் ஒன்றை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
லலித் அத்துலத்முதலி மஹாபொல உயர்கல்வி உதவித்தொகை அறக்கட்டளை நிதியத்தின் (MTF) அறங்காவலர் குழு இந்த சிறப்பு உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
வர்த்தக, வணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு இந்த விசேட புலமைப்பரிசில் தொகை தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
விசேட புலமைப்பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன, மேலும் மஹாபொல வலைத்தளமான www.mahapola.lk மூலமும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை சமர்ப்பிப்பது குறித்த கூடுதல் தகவல்களைக் கொண்ட லலித் அதுல்முதலி மஹாபொல உயர்கல்வி உதவித்தொகை அறக்கட்டளை நிதியத்தின் தலைவர் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி விஜித் கே. மலல்கொட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
உக்ரைன் தலைநகர் மேல் வெடித்த ரஷ்ய ஏவுகணைகள்- விண்வெளியிலிருந்து பதிவுசெய்யப்பட்ட காட்சி News Lankasri