கோவிட் சடலங்களை அடக்கம் செய்வதற்கு மகமார் கிராமம் முன்மொழிவு
திருகோணமலை - கிண்ணியா மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கோவிட் வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கான இடம் மகமார் கிராமத்தில் முன்மொழியப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கோவிட் தொற்றுடன் இறப்பவர்களை அடக்கம் செய்வதற்கான அனுமதி அரசாங்கத்தினால் வழங்கப்பட்டதனை அடுத்து இவ்வாறு கோவிட் சடலங்களை அடக்கம் செய்வதற்கான இடங்கள் நாடளாவிய ரீதியில் முன்மொழியப்பட்டு வருகின்றன.
இவ்வாறான நிலையில் கிண்ணியாவில் பிரதேசசபை எல்லைக்குட்பட்ட மகமார் கிராம சேவகர் பிரிவின் மயானம் அடக்கம் செய்வதற்கான இடமாக முன்மொழியப்பட்டுள்ளது.
குறித்த இடத்தினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு அது தொடர்பிலான அறிக்கையினை வழங்கவுள்ளதாகவும், சுற்றறிக்கைக்கு அமைவாக குறித்த இடம் அமையும்போது அடக்கம் செய்வதற்கான இடமாக அது அடையாளப்படுத்தப்படவுள்ளதாகவும் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி குறிப்பிட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த இடத்தை நேற்றைய தினம் பார்வையிட்டுள்ளதுடன், குறித்த விஜயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக், திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந், கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி, கிண்ணியா பிரதேசசபை தவிசாளர், பிராந்திய சுற்றுச்சூழல் அதிகாரிகள், பொலிஸார் மற்றும் இராணுவ அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
