அரசை பாதுகாப்புக்கான சட்டம் கொண்டு வர நினைப்பது இன்னுமொரு சுற்றில் தமிழர்களையும் ஒடுக்குவதற்கே அருட்தந்தை சத்திவேல்
அரசை பாதுகாப்புக்கான சட்டம் கொண்டு வர நினைப்பது இன்னுமொரு சுற்றில் தமிழர்களையும் ஒடுக்குவதற்கே என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அவரால் இன்று (13.04.2026) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விடுக்கப்பட்டுள்ள கண்டனம்
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "வெடுக்கு நாறி மலையில் உள்ள மத அடையாளங்கள் அனைத்தும் பௌத்த மதத்திற்குரியவை.

அதனை பாதுகாக்க வர்த்தமானி அறிவித்தல் வரும்" என புத்தசாசன அமைச்சர் கூறி உள்ளமை சிங்கள பௌத்தர்களுக்கு புது வருட பரிசா?
எனக் கேட்பதோடு இது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முகம் கொடுக்கும் அரசியல் தோல்வியை மறைத்து தமிழர்களின் கோபத்தில் அரசியல் செய்ய நினைக்கும் நரித்தனமாகும்.
இதனை வடக்கு- கிழக்கு தமிழர் தாயக அரசியல் கோட்பாட்டினின்று வன்மையாக கண்டிக்கின்றோம்.