படுகொலை செய்யப்பட்ட தினேஷ் ஷாப்டர் மரணத்தில் தொடர் திருப்பம்!வெளியான தகவல்
மர்மமான முறையில் உயிரிழந்த வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான மேலதிக நீதவான் விசாரணையை எதிர்வரும் 22ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் நேற்று (14.03.2023) உத்தரவிட்டுள்ளார்.
பிரேத பரிசோதனை விசாரணைகளை விசாரித்த நிரந்தர நீதவான் நேற்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் வழக்கு மேலதிக திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ், வழக்கை 2023 மார்ச் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
வெளிவராத அறிக்கை
கடந்த டிசம்பர் மாதம் 15ஆம் திகதியன்று, நீதவான் ராஜீந்திர ஜயசூரியவினால்,தினேஷ் ஷாப்டரின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பதை தீர்மானிக்க ஐந்து பேர் கொண்ட விசேட வைத்திய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் நீதிமன்றில் முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் முரண்பாடுகள் காணப்படுவதால் நீதவான் ராஜீந்திர ஜயசூரிய இந்த உத்தரவை பிறப்பித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதியின் சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான குறித்த குழுவின் அறிக்கை இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மர்மமான மரணம்
கொழும்பில் பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர், பட்டப்பகலில் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ள விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
பொரளை பொது மயானத்தில் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் காரில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன், பின்னர் தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
இதுவரை சந்தேகத்தின் பேரில் எவரும் அடையாளம் காணப்படாத நிலையில், தினேஷ் ஷாப்டரின் மரணம், கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில் விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 1 நாள் முன்

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை News Lankasri

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri

மைனர் வேட்டி கட்டி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இலங்கை குயின்! கமண்ட்டுகளை அள்ளி குவிக்கும் காட்சி Manithan

56 வயதாகும் நடிகை நதியாவா இது?- புகைப்படம் பார்த்து இந்த வயதிலும் இப்படியா, ஆச்சரியத்தில் ரசிகர்கள் Cineulagam
