விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக சர்வதேசம் சென்ற இராயப்பு ஆண்டகை! கர்தினாலுக்கு தேரர் பதிலடி
பேராயர் கர்தினால் அவர்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அடிக்கடி முரண்பாடான விடயங்களை தெரிவித்து வருகின்றார் என சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்த சுதந்த தேரர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
கர்தினால் அவர்களே, நீங்கள் நேற்று பாரதூரமான கருத்தொன்றை தெரிவித்தீர்கள். இந்த வழக்கை சர்வதேசத்திற்க்கு கொண்டு செல்வோம், அதே போல் பாப்பரசருக்கு தெரிவிப்போம் என்று சொன்னீர்கள். கர்தினால் அவர்களே நாங்கள் ஞாபகப்படுத்த விரும்புகின்றோம், நம் நாட்டில் 30 வருட கால யுத்தமொன்று இருந்தது.
மன்னார் மாவட்டதின் ஆயர் இராயப்பு ஜோசப் உட்பட குழுவினர் LTTE இயக்கத்திற்கு ஆதரவாக தொடர்ந்தும் செயற்பட்ட வேலையில் இந்த கத்தோலிக்க சபை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இராயப்பு ஜோசப் LTTE இயக்கத்திற்க்கு சார்பாக பேச ஜெனிவா வரை சென்றார்.
இராயப்பு ஜோசப் ஆண்டகை LTTE இயக்கத்தை பாதுகாத்தார். LTTE இயக்கம் தலதா மாளிகைக்கு குண்டு தாக்குதல் நடாத்திய போது இந்த நாட்டின் மஹா நாயக்க தேரர்களோ, இந்நாட்டின் பிக்குமார் அமைப்புக்களோ சர்வதேசத்திற்கு செல்லவில்லை.
இந்த வழக்குகளை சொல்ல ஜெனீவாவிற்கு செல்லவில்லை. இந்த நாட்டில் உள்ள உள்நாட்டு பிரச்சினைகளை உள்நாட்டிலேயே தீர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்து எப்படியாவது 30வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முடிந்தது.
அரந்தளவாயில் தேரர்களை வெட்டி குத்தி படுகொலை செய்யும் போது இந்த நாட்டின் மஹா நாயக்க சங்கமோ மஹா நாயக்க தேரர்களோ கோள் சொல்வதற்காக சர்வதேசத்திற்க்கு செல்லவில்லை.
இந்த நாட்டில் விகாரைகளுக்கு குண்டு தாக்குதல் நடாத்திய பொழுது கிராமங்களில் வாழ்ந்த அப்பாவி மக்களை கழுத்தறுத்து கொலை செய்யும் போது இங்கு எந்த மஹா நாயக்க தேரர்கலும், சிவில் அமைப்புக்களும் கோள் சொல்வதற்காக சர்வதேசத்திற்க்கு செல்லவில்லை.
அதனால் கர்தினால் அவர்களே நாட்டிற்கு எதிராக கோள் பேசாதீர்கள். இந்த பிரச்சினையை வெளிப்படையாக பாருங்கள். நாங்கள் அனைவரும் இணைந்து இனி வரும் களங்களில் இப்படியான சம்பவங்கள் இடம்பெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
நாங்கள் கர்தினால் அவர்களுக்கு சொல்கின்றேன் நம் நாட்டில் இனிமேல் இப்படியான விடயங்கள் இடம்பெறாமல் பார்த்துக்கொள்வோம் என குறிப்பிட்டுள்ளார்.