எரிபொருள் விலை அதிகரிப்பின் பின்னணியில் மாபியா கும்பல்! சுகீஸ்வர பண்டார விமர்சனம்

Anura Kumara Dissanayaka Gotabaya Rajapaksa Sri Lanka Fuel Crisis Fuel Price In World
By Aanadhi Jun 04, 2026 08:11 AM GMT
Report

நாட்டில் தற்போதைக்கு நடைமுறையில் உள்ள எரிபொருள் விலை அதிகரிப்பின் பின்னணியில் 'பெலவத்தை' மாபியா கும்பல் செயற்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக சுகீஸ்வர பண்டார விமர்சித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் செயலாளரும், நவஜனதா பெரமுண கட்சியின் தலைவருமான சுகீஸ்வர பண்டார , கூட்டு எதிர்க்கட்சி சார்பில் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு குறித்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட இரகசிய ஆயுதக்கிடங்கு! இளம் தம்பதியினர் தலைமறைவு - அவசர உதவிகோரும் பொலிஸார்

கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட இரகசிய ஆயுதக்கிடங்கு! இளம் தம்பதியினர் தலைமறைவு - அவசர உதவிகோரும் பொலிஸார்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்து, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகள் தங்களது உள்நாட்டு எரிபொருள் விலையைக் குறைத்துள்ள போதிலும், இலங்கையில் நிறுவனங்களின் மாஃபியாக்கள் மற்றும் ஊழல்கள் காரணமாகவே எரிபொருள் விலை குறைக்கப்படாமல் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பின் பின்னணியில் மாபியா கும்பல்! சுகீஸ்வர பண்டார விமர்சனம் | Mafia Fuel Price Increase Sugeeswara Bandara

தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் கடந்த எட்டு மாத காலத்திற்குள் பல 'கின்னஸ் சாதனைகளை' படைத்துள்ளது.

இலங்கைக்கு தரமற்ற மற்றும் சாம்பல் நிறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்தமை, அதிக விலைக்கு எரிபொருளைக் கொள்வனவு செய்தமை மற்றும் மின்வெட்டை முகாமைத்துவம் செய்ய முற்பட்டபோது ஏற்பட்ட பில்லியன் கணக்கான டொலர் நஷ்டத்தை ஈடுசெய்யவே அரசாங்கம் தற்போது எரிபொருள் விலையைக் குறைக்காமல் அதிகரித்துள்ளது.

தெற்காசியாவிலேயே அதிக விலைக்கு எரிபொருளை விற்கும் நாடாக இலங்கை மாறியுள்ளது. கடந்த பெப்ரவரி 28 முதல் மே 31 வரையான காலப்பகுதியில் உலகிலேயே அதிக சதவீதத்தால் டீசல் மற்றும் பெட்ரோல் விலையை அதிகரித்த நாடாக இலங்கை பதிவாகியுள்ளது.

அதன்படி, இலங்கையில் டீசல் விலை 38.9 வீதமாகவும், பெட்ரோல் விலை 27.6 வீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஈரான் - இஸ்ரேல் யுத்தம் காரணமாகவே விலை அதிகரிக்கப்பட்டதாக அரசாங்கம் கூறுவது முற்றிலும் பொய்யானதாகும்.

 தனியார் நிறுவனங்களிடமிருந்து சட்டவிரோத தரகுப்பணம்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இரு வாரங்களுக்கு முன்னர் நாட்டில் இரு வாரங்களுக்குரிய எரிபொருளே உள்ளதாகக் கூறியிருந்தார். அப்போது உலக சந்தையில் கச்சா எண்ணெய் பெரல் 94 டொலராக இருந்தது.

தற்போது விலை மேலும் குறைந்துள்ள நிலையிலும் உள்நாட்டில் விலையை அதிகரிப்பது தற்போதைய அரசாங்கத்திற்கும் அதன் எரிசக்தி அமைச்சருக்கும் விலை கட்டுப்பாடு குறித்து எந்தவொரு முறையான புரிதலும் இல்லை என்பதையே காட்டுகிறது.

எரிபொருள் விலை அதிகரிப்பின் பின்னணியில் மாபியா கும்பல்! சுகீஸ்வர பண்டார விமர்சனம் | Mafia Fuel Price Increase Sugeeswara Bandara

அத்துடன், அன்று கஞ்சனவின் கணக்கிற்கு தரகுப்பணம் செல்வதாகக் கூறியவர்கள், இன்று இந்த தனியார் நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் சட்டவிரோத தரகுப்பணம் தற்போது 'பெலவத்தைக்கு' செல்வது குறித்து மௌனம் காப்பது ஏன்?

இந்த தரகுப் பணம் யாருக்குச் செல்கிறது என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் தொடர்ந்து விமர்சித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஜனதா சேவக கட்சியின் தலைவர் ஜகத் விஜேசேகர மற்றும் லங்கா சமசமாஜ கட்சியின் கொழும்பு மாவட்ட தலைவர் பேஷல செனசிங்க ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

அரச வங்கி ATM இயந்திரத்திற்கு கொண்டுவரப்பட்ட கோடிக்கணக்கான பணம் கொள்ளை - வெளியான தகவல்

அரச வங்கி ATM இயந்திரத்திற்கு கொண்டுவரப்பட்ட கோடிக்கணக்கான பணம் கொள்ளை - வெளியான தகவல்

இலங்கையை உலுக்கிய கோர விபத்து : மாணவன் - பெண்கள் உட்பட மூவர் பலி

இலங்கையை உலுக்கிய கோர விபத்து : மாணவன் - பெண்கள் உட்பட மூவர் பலி

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US