மதுரை ஆதீனம் காலமானார்!
மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார். மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் (77), உடல்நலக்குறைவு காரணமாக சில தினங்களுக்கு முன்பு மதுரை அப்பல்லோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது. அவருக்கு வைத்தியர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
எனினும், இன்று அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. வைத்தியர்கள் தொடர் சிகிச்சை அளித்துவந்த நிலையில் சுவாசக் கோளாறு காரணமாக மதுரை அப்பல்லோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மதுரை ஆதீனத்தின் உயிர் பிரிந்தது.
தமிழகத்தின் மிகத் தொன்மையான சைவ சமயத் திருமடங்களில் ஒன்று மதுரை ஆதீனம். மதுரையில் அமைந்துள்ள இந்த ஆதீனம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டது.
மதுரை ஆதீனத்திற்கு இன்று வரை 292 பேர் பீடாதிபதியாக இருந்துள்ளனர். 292வது பீடாதிபதியாக அருணகிரிநாதர் பொறுப்பில் இருந்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத சூழல் - 160 கிலோ எடையை 75 கிலோவாக குறைத்த மகன் News Lankasri
தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri