தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு உதவிய குற்றச்சாட்டு! தண்டனையை குறைத்த சென்னை நீதிமன்றம்
தண்டனை குறைப்பு
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் அளித்து இலங்கையில் தாக்குதல் நடத்த சதி செய்ததாகக் கூறப்படும் இரண்டு இலங்கையர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை சென்னை மேல் நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று குறைத்துள்ளது.
இந்தியாவை விட்டு வெளியேறுவதாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் ஈடுபடமாட்டோம் என்றும் அவர்கள், வழங்கிய உறுதிமொழியை அடுத்து நீதிமன்றம் இந்த தண்டனை குறைப்பை வழங்கியுள்ளது.
கிருஷ்ணகுமார் மற்றும் சுபாஸ்கரன் ஆகியோருகே இந்த தண்டனை குறைப்பு வழங்கப்பட்டுள்ளது.
7ஆண்டுகளாக தண்டனை குறைப்பு
இவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்ட நிலையில் ஏற்கனவே அவர்கள் 6 வருடங்கள் மற்றும் 10 மாதங்களை சிறையில் கழித்துள்ளனர்.
இந்தநிலையில் மொத்த தண்டனையை சென்னை மேல் நீதிமன்றத்தின் மதுரைக்கிளை 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து இந்தியாவை விட்டு வெளியேறுவதாக குற்றம் சுமத்தப்பட்டவர்கள் உறுதியளித்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து வெளியேறும் வரை ஏதிலி முகாம்களில் தங்கியிருக்கப்போவதாக அவர்கள் நீதிமன்றத்தில் உறுதியளித்தனர்.