வடமாகாண வைத்தியசாலைகளுக்கு மருத்துவப்பொருட்கள் வழங்கி வைப்பு (Photo)
இலங்கையில் தற்காலத்தில் நிலவும் அரசியல் நெருக்கடி பொருளாதார அவசரநிலை மற்றும் சமூகமட்ட நோயாளர் நல அத்தியாவசிய நிலை காரணமாக மருத்துவம் சார்ந்த பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இதற்கமைய 24 மில்லியன் பெறுமதியான மருந்து பொருட்கள் வட மாகாணம் உட்பட யாழ். போதனா வைத்தியசாலைக்கு எஸ்.கே. நாதன் அவர்களினால் சுகாதார அமைச்சின் செயலாளரிடம் நேற்று (23) நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
நன்கொடையாக கிடைக்கப்பெற்றவை
இந்த நிலையில் யாழ்போதனா வைத்தியசாலையினரின் அவசர வேண்டுகோளிற்கமைய எஸ்.கே நாதன் அறக்கட்டளையின் முழுமையான நிதிப்பங்களிப்பினால் வடமாகாண வைத்தியசாலைகளுக்கு அத்தியாவசியமான மருந்து பொருட்கள் சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.ஜானக ஸ்ரீ சந்திரகுப்தா மற்றும் டொக்டர் அன்வர் ஹம்தானி ஆகியோரிடம் உத்தியோக பூர்வமாக சுகாதார அமைச்சின் செயலகத்தில் கடந்த (21) கையளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வழங்கப்பட்ட நன்கொடை மருந்துகள் வடமாகாண வைத்தியசாலைகளுக்கு மிக விரைவில் விநியோகிக்கப்படும் என அமைச்சின் செயலாளர் உறுதியளித்துள்ளார்.
மேலும், யாழ் போதனா வைத்தியசாலைக்கு பி.சி.ஆர் இயந்திரம், பாதுகாப்பு உடைகள் மற்றும் பல நிதியுதவிகள் கிடைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது,





குழந்தையாக நடித்துவிட்டு அஜித்துக்கு ஜோடியாக நடிப்பீங்களா? பிரெஸ் மீட்டில் நடிகை யுவினா காட்டமான பதில் Cineulagam
