விசுவமடுவில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு
மாவீரர் தினத்தினை முன்னிட்டு மாவீரர் பெற்றோர்கள் உரித்துடையோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு பிரதேசங்கள் ரீதியாக நடைபெற்று வருகின்றது.
அந்தவகையில் நேற்றையதினம் (23.11.2025) முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு புத்தடி விநாயகர் ஆலயத்திற்கு அருகாமை பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் விசுவமடு மேற்கு, கிழக்கு பகுதிகளை சேர்ந்த மாவீரர் பெற்றோர்கள் உரித்துடையவர்கள் மதிப்பளிக்கப்பட்டுள்ளார்கள்.

விசுவமடு பிரதேசத்தினை சேர்ந்த மாவீரர் பெற்றோர்கள் மாலை அணிவிக்கப்பட்டு மங்கள வாத்திய இசையுடன் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்திற்கு அழைத்து வரப்பட்டு பொதுச்சுடரினை மூன்று மாவீரர்களின் சகோதரி புஷ்பராணி ஏற்றி வைத்ததனை தொடர்ந்து மாவீரர்களின் பொது படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு மாவீரர் பெற்றோர்கள் மதிப்பளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
தங்க விலையில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்.. சர்வதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பாபா வங்காவின் தகவல்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



