ஆயிரக்கணக்கான மக்களின் விண்ணதிரும் கதறலுடன் கண்ணீரில் நனைகிறது கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் (Video)
கிளிநொச்சி - கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இன்று மாலை சரியாக 6.05 மணியளவில், பிரதான சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மூன்று மாவீரர்களின் சகோதரியும், தமிழீழ மாவீரர் பணிமனையின் பொறுப்பாளர் பொன் தியாகம் அவர்களின் புதல்வியுமாகிய அனந்தி பிரதான சுடரினை ஏற்றி வைத்தார்.
பெருந்திரளான மக்கள் இதில் கலந்து கொண்டு தமது மாவீரர்களாகிப் போன தமது உறவுகளை நினைந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
“தாயக கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே” என அனைவரும் ஒரே குரலாய் சங்கமித்து இன்னுயிர் ஈந்த தமது உறவுகளை நினைவுகூரும் உணர்வுபூர்வமான தருணம் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாய் அமைகிறது...

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
