காரைநகரில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற மாவீரர்கள் தின நிகழ்வு(Photos)
இலங்கை தமிழரசு கட்சியின் காரைநகர் மூலக்கிளையின் ஏற்பாட்டில் மாவீரர்கள் தின நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த அஞ்சலி நிகழ்வில் மாவீரர் பெற்றோரினால் பொதுச்சுடரேற்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
தொடர்ச்சியாக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி கிளை தலைவருமான ஈஸ்வரபாதம் சரவணபவனால் அஞ்சலியுரையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் தடை
இதன்பொழுது மாவீரர் பெற்றோர்கள் ,பொதுமக்கள், காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களான ஆண்டி ஐயா விஜயராசா, நாகாராசா ,தவமணி , இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி கிளை செயலாளர் பற்றிக் தனுஷ் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை இன்று காலை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் குறித்த நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கு ஊர்காவற்துறை பொலிஸார் தடைகோரிய நிலையில் நீதிமன்று நிராகரித்து குறித்த நிகழ்வுகளை நடாத்த அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.