பயங்கரவாத தடைச் சட்ட கைது விவகாரம்: ஆச்சரியம் அடைந்த ஜனாதிபதி- சாணக்கியன் வெளிப்படுத்திய தகவல் (Video)
மாவீரர் தின நிகழ்வின் போது மட்டக்களப்பில் இடம்பெற்ற கைது தொடர்பாக ஜனாதிபதியுடன் உரையாடிய போது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டமையை கேட்டு அவர் ஆச்சரியப்பட்டாதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட நால்வரும் நேற்று விடுவிக்கப்பட்ட நிலையில் அவர்களை சந்தித்த இரா.சாணக்கியன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி மாவீரர் தினத்தன்று மிக அராஜகமாக முறையிலே பொலிஸார் கரவை துயிலும் இல்லத்திற்கு வருகை தந்த நால்வரை கைது செய்துள்ளனர்.
அதனை தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்ட அடுத்த நாள் நீதி மன்றத்தில் சாதரண குற்றவியல் சட்டத்தின் கீழ் அல்லாமல் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழே முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
அதன் பின்னர் சட்டமா அதிபரின் ஆலோசனை வந்தால் மட்டுமே பிணை வழங்கப்படும் என தெரிவித்தனர். நினைவு கூரல் என்பது சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விடயம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |