முல்லைத்தீவில் பல பகுதிகளில் சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு
தமிழ் மக்களுக்கான உரிமை போருக்காக தங்களது பிள்ளைகளை உவந்தளித்த மாவீரர்களது பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு தமிழர் தாயகமெங்கும் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல்வேறு இடங்களிலும் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றன.
அந்தவகையில் முல்லைதீவு செம்மலை பகுதியில் மாவீரரின் பெற்றோரைக் கெளரவிக்கும் நிகழ்வு இன்று(26.11.2023) இடம்பெற்றுள்ளது.
அஞ்சலி நிகழ்வு
இதன் போது 75 இற்கும் மேற்பட்ட மாவீரர்களின் பெற்றோர் உறவினர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் யுத்தத்தில் இறந்தவர்களுக்கான அஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றது.
மேலும், தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டது இதன்போது அஞ்சலி உரைகளும் இடம்பெற்றுள்ளது.
அத்தோடு வள்ளிபுனம்
தேவிபுரம் பகுதிகளை சேர்ந்த மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு விசேடமாக
ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் நேற்று (25.11.2023) சிறப்பாக இடம்பெற்றது.
மாலை அணிவிக்கப்பட்டு அகவணக்கம்
குறித்த நிகழ்வில் மாவீரர்களுடைய பெற்றோர்கள் வள்ளிபுனம் முருகன் ஆலயம் முன்பாக இருந்து மலர் மாலை அணிவித்து மங்கள வாத்தியம் மற்றும் பான்ட் வாத்திய அணிவகுப்போடு விழா மண்டபம் வரை அழைத்துவரப்பட்டு அங்கு பொதுச்சுடரினை நான்கு மாவீரர்களின் தாயார் ஒருவர் ஏற்றியுள்ளார்.
தொடர்ந்து அங்கு சுடர்கள் ஏற்றப்பட்டு திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் வணக்கம் இடம்பெற்றதோாடு அகவணக்கம் செலுத்தப்பட்டு பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு இடம் பெற்றுள்ளது.
மேலும், மாணவர்களின் கலை நிகழ்வுகளோடு இடம்பெற்ற குறித்த பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வில் வள்ளிபுனம் தேவிபுரம் பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்ப்பட்ட பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.
அத்தோடு, பெற்றோர்களுக்கு மாவீரர்களின் நிணைவாக தென்னங்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், மூங்கிலாறு பகுதியில் விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் மூங்கிலாறு,வள்ளுவர் புரம், தேராவில், இளங்கோபுரம், மாணிக்கபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாவீரர்களுடைய பெற்றோர்களுக்கான மதிப்பளிவு நிகழ்வு நேற்று (25) மிகச் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
இதன்போது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதோடு அகவணக்கம் செலுத்தி மலர்வணக்கம் இடம் பெற்றதை தொடர்ந்து பெற்றோர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம் பெற்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

















